இலங்கை
Typography

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் கருத்துக்களினால் நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

“இலங்கையானது சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடாகும். எனவே, சிங்களவர்கள் தான் இங்கு ஆட்சி செய்யவேண்டும். சிங்களவர்களுக்கு ஏற்றவகையில்தான் அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது பல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசியலமைப்பு சபையால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு, யாப்பின் ஊடாக நாடு பிளவுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்