இலங்கை
Typography

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், பாதுகாப்பு செலவீனங்களுக்காக 250 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ள அரசாங்கம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கின் அபிவிருத்திக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். 

அவர் தெரிவித்துள்ளதாவது, “யுத்த காலத்தில் அதிக அழிவைச் சந்தித்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மீள் கட்டுமானம், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு, தொழிற்சாலைகள் எனப் பல முன்மொழிவுகளை 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்காக முன்வைத்திருந்தோம். அந்த முன்மொழிவுகளுக்கு இன்னும் திருப்தியான அளவில் நிதி கிடைக்கவில்லை.

நிதியமைச்சரும், பிரதமரும் நாடு திரும்பியதும் இது தொடர்பில் நேரில் சந்தித்து எமது மாகாணங்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வோம். அதேநேரம், யுத்தம் முடிவடைந்த பின்னரும், பாதுகாப்பு அமைச்சுக்கு இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் எமது கண்டனத்தை தெரிவிப்போம். வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கான தேவைகளை நிறைவு செய்யாவிடின் 2018 வரவு செலவுத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக எதிர்க்க வேண்டி வரும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்