இலங்கை
Typography

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் திகதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளனர். 

மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கிய தீர்ப்பாயத்தில் வித்தியா படுகொலை வழங்கு நடைபெற்று வருகின்றது. நேற்று வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்ட நிலையில், இன்று எதிரி தரப்பின் சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்டது.

அதன்பின்னர் தீர்ப்பாயம் எதிர்வரும் 27ஆம் திகதி கூடும் என்று திகதியிடப்பட்டது. அன்று தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்