இலங்கை
Typography

பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்திற்கு முத்தையா முரளிதரனின் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளதாக, அவரது தந்தை முத்தையா தெரிவித்துள்ளார். 

எனவே, விளையாட்டுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண தலையிடுமாறு, மல்வத்து பீட மகாநாயக்க தேரரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை தேரரை சந்தித்த பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட முரளிதரனின் தந்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் குறித்த விளையாட்டு மைதானத்திற்கு முத்தையா முரளிதரனின் பெயர் வைக்கப்பட்டதாக கூறினார். எனினும், தற்போது அந்தப் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக, மகாநாயக்க தேரர் உறுதியளித்துள்ளதாகவும் முத்தையா முரளிதரனின் தந்தை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Most Read