இலங்கை
Typography

சமஷ்டி அடிப்படையிலான தீர்வு, மதச்சார்பற்ற நாடு, வடக்கு- கிழக்கு இணைப்பு உள்ளிட்ட விவகாரங்களை முன்னிலைப்படுத்தியே, அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தினை ஆதரிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வெளிவருமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசியலமைப்பின் 20வது திருத்தம் குறித்த கட்சியின் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார்.

அங்கு அவர் தெரிவித்ததாவது, “ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பௌத்த மதத்திற்கு விசேட இடம் கொடுக்கப்படுவதை நாம் மறுக்கவில்லை. ஆனால், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் சமமாக நடாத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.

எமது இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணங்கினால், 20வது திருத்தத்தை பரிசீலிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளதென்பதை தெரியப்படுத்தியுள்ளோம். 18 மாதங்களுக்கு மேலாக உள்ள நிலையில் ஏதாவதொரு மாகாண சபை கலைக்கப்பட்டால், அதற்று இடைக்கால தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதையும் தமிழ் தேசிய கூட்மைப்பு வலியுறுத்தியுள்ளது.” என்றுள்ளார்.

Most Read