இலங்கை
Typography

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோர், தமக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேற்முறையீடு செய்துள்ளனர். 

2015ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி, ‘சில்’ துணிகளை விநியோகம் செய்ததாக இவர்களுக்கு எதிராக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.

இதன்படி, கடந்த 7ஆம் திகதி இவர்கள் குற்றவாளிகள் என தீர்மானித்த கொழும்பு மேல் நீதிமன்றம், மூன்று வருடங்கள் சிறைத் தண்டனையும் விதித்தது.

இந்தநிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து, இன்று திங்கட்கிழமை இருவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்