இலங்கை
Typography

பதவிக்காலம் முடிந்த மாகாண சபைகளின் தேர்தல்களை ஒத்திவைப்பது அவசியமற்றது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு அரசியலமைப்பை திருத்த வேண்டும். இது நாட்டில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்று அவர் நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள முடிவுகளை வரவேற்கின்றோம். சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகிறது.

இந்த சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென்ற 20ஆம் திருத்த யோசனையை கைவிட வேண்டும். உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் நாம் இப்போது ஏற்றுக்கொண்டுள்ள புதிய கலப்பு தேர்தல் முறைமையை ஒருமுறை பரீட்சித்து பார்க்கப்பட வேண்டும்.” என்றுள்ளது.

Most Read