இலங்கை
Typography

சமுர்த்தி அனுகூலங்களை குறைப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

சமுர்த்தி நன்மைகளை பெறத் தகுதியுடைய, ஆனால் அது வழங்கப்படாத பெருந்தொகையானோர் நாட்டில் காணப்படுவதுடன், அவர்களுக்கு புதிதாக அந்த வரப்பிரசாதங்களை வழங்குவதனை தவிர்த்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்கனவே நன்மைகளை பெறுபவர்களின் சமுர்த்தி கொடுப்பனவுகள் நீக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய கம்உதாவ விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளவை வலய விவசாய மக்களுக்கு 5000 காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சமுர்த்தி நன்மைகளை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்வேறு அரசியல் தூண்டுதல்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் எந்தவித உண்மையும் இல்லை. பொதுமக்களின் நன்மைகளை கருதியே தற்போதைய அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

விவசாய மக்கள் தமது பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொள்வதற்கும், தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக விவசாய துறையில் புதிய செயற்திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்