இலங்கை
Typography

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விசேட திட்டங்கள் அமைச்சராக பதவி வகிக்கும் திலக் மாரப்பனவை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையே இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் காரணமாக வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்து வந்த ரவி கருணாநாயக்க, நேற்று வியாழக்கிழமை தனது பதவி விலகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Most Read