இலங்கை
Typography

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். 

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு இன்று திங்கட்கிழமை எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்த வடக்கு மாகாண சபை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

இரா.சம்பந்தன் அனுப்பியுள்ள கடிதத்தின் முழுமையான வடிவம்:

கௌரவ. நீதியரசர்- சீ.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர் வட மாகாணம்

அன்புக்குரிய விக்னேஸ்,

தங்களது 19.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. நீங்கள் கூறியுள்ள அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.

மேலும் மூன்று நிபந்தனைகளின் அடிப்படியில் இந்தவிடயம் முடிவிற்குகொண்டு வரப்படவேண்டும் என தெரிவித்து ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் பேரருட் திரு. வணபிதா. ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதமும் கிடைத்துள்ளது.

சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்ககூடாது என்பதனை குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன்.

நான் தற்போது தொலைபேசியில் கௌரவ வடமாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு குறித்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை மீளப் பெறப்படும் என தெரிவித்துள்ள அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களோடு தொடர்பிலுள்ளேன்.

எல்லாம் நலமாகவே அமையட்டும்.

நாம் வெகு விரைவில் சந்தித்தது பல பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகமான கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்க்கிறேன்.

உண்மையுள்ள

இரா. சம்பந்தன்
தலைவர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்