இலங்கை
Typography

வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் சமரச முயற்சியில் நல்லை ஆதின முதல்வரும், யாழ். கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசனும் ஈடுபட்டுள்ளனர். 

இதன் ஒரு கட்டமாக, சற்று முன்னர் (இன்று திங்கட்கிழமை) முதலைமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவர்கள் இருவரும் சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டனர்.

இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லை ஆதின முதல்வரையும், யாழ். கத்தோலிக்க மறை மாவட்ட ஆயரையும் சந்தித்து பேசியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Most Read