இலங்கை
Typography

வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிலியிருந்து சி.வி.விக்னேஸ்வரனை நீக்கும் அதிகாரம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கத்துக்கு இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்ட பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளரமான நா.செல்வக்குமாரன் தெரிவித்துள்ளார். 

அவர் கூறியுள்ளதாவது, “மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுகிறார் என்ற ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்து அவரின் பதவியை இழக்க செய்வதற்கான அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு. அவர் மாகாணசபை உறுப்பினர் பதவியை இழந்தால் முதலமைச்சர் பதவியையும் இழப்பார்.

நியாயமான காரணங்கள் இருந்தால் அவர் எந்தக் கட்சியில் போட்டியிட்டாரோ அந்தக் கட்சி அவரை மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் முதலமைச்சர் பதவியிலிருந்தும் நீக்க முடியும். எனினும், தன்னை கட்சியிலிருந்து நீக்கியது தவறு என முதலமைச்சர் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து நீதி கோர முடியும்.

நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்துதான் ஒருவரை நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆயினும், மாகாணசபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்றால் அவர்கள் நம்பிக்கையில்லா பிரேரரணை கொண்டு வர முடியும்.” என்றுள்ளார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட்டது. அதன்பிரகாரம், கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் சார்பில், தமிழரசுக் கட்சியின் செயலாளரே, தீர்மானங்களை அறிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்