இலங்கை
Typography

சர்வதேச சமாதானச் சுட்டெண் தரப்படுத்தலில், இலங்கை கடந்த ஆண்டை விட 17 இடங்கள் முன்னேற்றம் கண்டு 80வது இடத்தைப் பிடித்துள்ளது. 

புதிய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சமாதானத்துக்கான நல் மாற்றங்கள் காணப்பட்டுள்ளதாக தரப்படுத்தலை வெளியிட்டுள்ள நிறுவம் தெரிவித்துள்ளது.

163 உலக நாடுகள் மத்தியில் நடத்தப்பட்ட இந்தத் தரப்படுத்தலில், ஐஸ்லாந்து முதலாவது இடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியாவின் பொருளாதார மற்றும் சமாதான ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றினால் இந்த சர்வதேச சமாதானம் தொடர்பான சுட்டெண் தரப்படுத்தல் வரிசை வெளியிடப்பட்டுள்ளது.

Most Read