இலங்கை
Typography

மக்களினால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக மக்களின் அனுமதியின்றி நடவடிக்கை எடுக்க முடியாது. அதுபோல நீக்கவும் முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ள நிலையில், தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனையை கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, ஈபிஆர்எல்எப் மற்றும் புளோட் ஆகிய அமைப்புக்களின் தலைவர்களுக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன்பின்னர் கருத்து வெளியிடும் போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு கூறியுள்ளார்.

 

Most Read