இலங்கை
Typography

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. 

மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 03ஆம் திகதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளில் நீதியும் உண்மையும் நிலைநாட்ட வேண்டும் என்பதே மக்களின் அபிலாசைகளாக காணப்படுகின்றது.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மாநாட்டிலும் இந்த பரிந்துரைகளே போன்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்.” என்றுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்