இலங்கை
Typography

ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP +) வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும் வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்தினால் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சலுகை கடந்த ஆட்சிக் காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மீளப்பெறப்பட்டிருந்ததோடு, தற்போது நிலவும் மனித உரிமை முன்னெடுப்புகள், நல்லாட்சி தொடர்பில் கருத்திற்கொண்டு குறித்த வரிச்சலுகையை வழங்க தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

Most Read