இலங்கை
Typography

தகவலறியும் உரிமைச் சட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். 

கடந்த ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த சட்டமூலம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த வர்த்தமானி வெளியானதன் பின்னர், தமக்குத் தேவையான எந்தவொரு தகவலையும் எந்தவொரு அரச நிறுவனங்களிலிருந்தும், நாட்டின் பிரஜைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Most Read