இலங்கை
Typography

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை அரசாங்கம் நிராகரிக்க முடியாது. ஏனெனில், குறித்த செயலணி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதாகும் என்று தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்துக்கமான அலுவலகத்தின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

குறித்த செயலணியின் அறிக்கையை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நிராகரித்தமையானது பிழையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலணியின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனைக் கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியை நான் உருவாக்கவில்லை. என்னுடைய அலுவலகமும் செய்யவில்லை. அரசாங்கத்தின் கீழ் பல நிறுவனங்கள் இருக்கின்றன. அமைச்சரவையின் அங்கிகாரத்துடனேயே இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு, போர்க்கற்றம் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பில் கருத்துகளை கேட்டறிந்து பரிந்துரைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பரிந்துரைகளுக்கு பதிலளிக்கும் கடப்பாடு, அரசாங்கத்துக்கு இருக்கிறது. எனினும், இந்தச் செயலணிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம், பரிந்துரைகளை செய்யமுடியாது.

அரசாங்கம் என்ன செய்யவேண்டுமென்று நான் கூறமுடியாது. எனினும், இந்தப் பரிந்துரைகளை நீதியமைச்சர் வியஜதாஸ ராஜபக்ஷ நிராகரித்தமை பிழையானது. பரிந்துரைகளின் பிரகாரம் போர்க்குற்றம், வெளிநாட்டு கண்காணிப்பாளர் உள்ளிட்ட பரிந்துரைகளை முழுமையாக ஆராய்ந்து கலந்துரையாடியதன் பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்