இலங்கை
Typography

இனவாதத்தைத் தூண்டி ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ஒருவர் முயற்சித்து வருவதாக தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்துக்கமான அலுவலகத்தின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். 

“எனது ஆட்சிக் காலத்தைவிட தற்பொழுது அடிப்படைவாதம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிகாரத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக சிலர் அடிப்படைவாதத்தை இனவாதமாக்கி வருகின்றனர். இனவாத செயற்பாடுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒருவரே தலைமை தாங்கி வருகின்றார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலணியின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சிறுபான்மையினரிலும், பெரும்பான்மையினரிலும் அடிப்படைவாதிகள் இருக்கின்றனர். அடிப்படைவாதிகள் மிகவும் சிறியதொரு குழு மாத்திரமே. நாட்டில் பெரும்பான்மையானவர்களுக்கு சரியான முறையில் விளக்கமளித்து உண்மை நிலைமையை எடுத்துக் கூறுவதன் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்