இலங்கை
Typography

நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 43வது ஆண்டு நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், குறித்த படுகொலைச் சம்பவத்தை நேரில் கண்ட சட்டத்தரணியால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இவ் அஞ்சலி நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், விந்தன் கனகரட்னம், சிவசேனை கட்சியின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட அதிதிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1974ஆம் ஆண்டு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஏற்பட்ட கலவரத்தில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்