இலங்கை
Typography

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு ஊடகங்களை கட்டுப்படுத்தும் எண்ணம் கிடையாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் உயர்கல்வி அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

நாடு, மக்கள், மதங்கள், கலாசாரங்கள் மனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எதனையும் பிரசுரிக்க முன்னர், ஊடக நிறுவனங்கள் அதனை சுயபரிசோதனைக்கு உட்படுத்துவது சிறந்ததென்றும் அதன் மூலம் சிறந்த ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை தகவல் தொடர்பாடல் அமைச்சில் இடம்பெற்ற போதே பந்துல குணவர்த்தன இவ்வாறு கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்