இலங்கை
Typography

இலங்கைக்கு தென்கிழக்கு திசையின் கடற்பகுதியில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இன்று புதன்கிழமை அதிகாலை 02.34 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

அம்பாந்தோட்டையிலிருந்து 240 கிலோமீற்றர்ருக்கு தொலைவில், தென்கிழக்கு கடற்பிராந்தியந்தில் நில அதிர்வு பதிவாகியதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5.4 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. 10 கிலோமீற்றர் கடல் பாறைக்குள் ஏற்பட்டுள்ள இந்த நில அதிர்வால் இலங்கைக்கு எவ்வித சுனாமி எச்சரிக்கையும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்