இலங்கை
Typography

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய 5 இறுவெட்டுக்களை பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சமர்ப்பித்துள்ளார். 

முன்னதாக, அவர் கூறியவாறு குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தாரா என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் ரஞ்சன் ராமநாயக்க தன்னிடம் குரல் பதிவுகள் இருப்பதாக தனது பெயரையும் கூறி உரையாற்றியதாகக் குறிப்பிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர, குரல் பதிவு சாட்சியங்களை அவர் சமர்ப்பித்தாரா என்பதை அறிய விரும்புவதாகக் கூறினார்.

இதற்கு பதிலளித்த ரஞ்சன் ராமநாயக்க, ஒலிப்பதிவுகளை வங்கியொன்றின் லாக்கரில் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், நேற்றைய நாளுக்குள் அரசாங்கத்திற்கு பாதகமான இறுவெட்டுக்களை மாலை 06 மணிக்கு முன்னதாகக் கையளிப்பதாகக் குறிப்பிட்டார். அவர் கூறியவாறு, 5 இறுவெட்டுக்களை பாராளுமன்றத்தில் நேற்று மாலை சமர்ப்பித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்