இலங்கை
Typography

சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து புதிய கூட்டணி ஒன்றை அமைத்து அதனூடாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

திவுலபிட்டியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் நேற்று திங்கட்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய பயணத்தை ஆரம்பிக்கவே நாம் புதிய கதவை திறந்துள்ளோம். பொது மக்கள் அரசாங்கம், பொது மக்களின் யுகம் ஒன்றை ஆரம்பிப்போம்.

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை. இப்போது வேலைநிறுத்த போராட்டங்கள் இல்லை. அந்த வேலைநிறுத்த போராட்டங்கள் ஊழியர்களின் நலனுக்காக நடத்தப்பட்டதல்ல, மாறாக அவை அரசாங்கத்தை கைப்பற்ற முன்னெடுக்கப்பட்டவை. இப்போது சுகமாக உள்ளதா? பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறப்பதற்கு இடமளிக்க போவது இல்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்