இலங்கை
Typography

தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு அக்கட்சி தீர்மானித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருண தெரிவித்துள்ளார். 

ரஞ்சன் ராமநாயக்க மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில், கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவும் உயர் மட்டம் தீர்மானித்திருப்பதாக ஹர்ஷண ராஜகருணா குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இவற்றைக் கூறியுள்ளார்.

ஹர்ஷண ராஜகருண மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசியல்வாதிகள், அரச உயரதிகாரிகள், நீதித்துறை சார்ந்தோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலருடனான தொடர்புகளை ஒலிப்பதிவு செய்த ஒலிநாடாக்கள் பெரும் ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றை ஆராய்ந்த போது பாரிய குற்றச் செயல்களுக்கு திட்டமிடப்பட்டிருந்தமையும் தெரிய வந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ரஞ்சன் ராமநாயக்கவின் இந்த செயலால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயக வழியில் பயணிக்கும் பழம்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ள ரஞ்சன்மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு கட்சித் தலைமை தீர்மானம் எடுத்திருப்பதாக ஏற்கனவே ஐ.தே.க. செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதனடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்கவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்