இலங்கை
Typography

“பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலி இறுவட்டு மூலம் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்து அது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது.“ என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையை பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு பொறுப்புள்ளதாக தெரிவித்த பிரதமர், அதற்கிணங்க நீதிமன்றத்திலிருந்து வெளியாகும் தகவல்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் (வியாழக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மேற்படி இறுவட்டு வெளியிட்டுள்ள தகவல்களுக்கிணங்க கடந்த காலங்களில் நீதிமன்றத்திற்கு எந்தளவு அழுத்தங்கள் இருந்திருக்கும் என்பது தெரியவருகிறது. நீதிமன்றம் தொடர்பில் மக்களுக்கு உள்ள நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படுவது சிறந்ததல்ல. அதனால் நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்பு தொடர்பிலும் மக்கள் சந்தேகக் கண்கொண்டே பார்க்க நேரிடும்.“ என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்