இலங்கை
Typography

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒழுக்கக் கோவையை மீறியுள்ளாரா, என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. 

விசாரணைகளின் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய அலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து அறிக்கை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS