இலங்கை
Typography

ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைப்பேசி குரல் பதிவுகள் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

ரஞ்சன் ராமநாயக்க வெவ்வேறு நபர்களுடன் மேற்கொண்ட தொலைப்பேசி உரையாடல்கள் குறித்த குரல் பதிவுகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, பொலிஸ், நீதிமன்ற சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டமைக்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு கடந்த 04ஆம் திகதி பிற்பகல் 03 மணி அளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்த நிலையில் பிஸ்டல் ஒன்றும் மேலும் சில இறுவட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

அதன்படி, காலாவதியான பிஸ்டல் ஒன்றை வைத்திருந்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டார்.

பின்னர், கைது செய்யப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க கங்கொடவில நீதவான் நீதிமன்றில் கடந்த 05ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்