இலங்கை
Typography

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (சி.ஐ.டி) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று புதன்கிழமை பிறப்பித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய அலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக தெரியவந்த தகவலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம், பொலிஸ் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்