இலங்கை
Typography

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான அருளர் என்கிற ரிச்சர்ட் அருட்பிரகாசம் காலமானார். 

சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 03.30 மணியளவில் காலமானார்.

அருளர், ஈரோஸ் (EROS) இயக்கத்தின் தொடக்ககால உறுப்பினர்களில் ஒருவர். ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராக இருந்து, போராட்ட வரலாற்றில் இணைந்திருப்பவர். இலங்கை இன முரண்பாடுகளின் விளைவுகளை முன்வைத்து, 'லங்கா ராணி' என்ற நாவலை எழுதியவர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்