இலங்கை
Typography

“தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எடுபிடியாக மாறிவிட்டது. எனவே, மீண்டும் ரெலோவில் இணைய மாட்டேன்” என்று ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமாக இருந்து, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் இரண்டு வாரத்தில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பை என்.ஸ்ரீகாந்தா வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ரெலோ அமைப்பு தமிழரசுக் கட்சியின் எடுபிடியாக ஒட்டிக்கொண்டு செயற்பட்டு வருகின்றது. எனவே, மீண்டும் ரெலோவுடன் இணைந்து கொள்வதென்பது சாத்தியமில்லை என்பதால், தனியாக பயணிக்க உள்ளேன். தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளை இணைந்ததாக அந்தப் பயணம் அமையும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்