இலங்கை
Typography

“எமது ஆட்சிக் காலத்தில் வடக்கு- கிழக்கு மற்றும் மலையகம் என்ற பேதமின்றி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் சிறப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார்கள்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

நுவரெலியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மலைய இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பளிக்கப்படவில்லை. பலர் காணாமலாக்கப்பட்டதோடு வெள்ளை வேனில் கடத்தப்பட்டனர். எமது ஆட்சிக் காலத்தில் இவை அனைத்தும் ஒழிக்கப்பட்டன. மலையக மக்களுக்கு 5000 காணி உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 25 தேசிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான அபிவிருத்திகள் தொடர வேண்டுமாயின் வறுமையிலிருக்கும் மக்களுடன் இணைந்து பயணிக்கக் கூடிய தலைவரான சஜித் பிரேமதசவை நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும்.

நுவரரெலியாவில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஷ புறக்கணிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கே முக்கியத்துவமளிக்கப்பட்டது. இவ்வாறு கட்சி ஆதரவாளர்களே அவரை புறக்கணிக்கும் போது ஏனையோர் எவ்வாறு வாக்களிப்பார்கள்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்