இலங்கை
Typography

வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என்று நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்கள், அபிவிருத்திப் பாதைக்காக வாக்களிக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

அம்பலாங்கொடையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அநுர குமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஏற்கனவே ஆட்சிசெய்துவரும் இரண்டு அரசியல் கட்சிகளுக்கும் இன்னும் 100 வருடங்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தாலும் நாட்டை அழிவுப்பாதைக்கு ஈட்டுச் செல்வார்களே தவிர வேறு எவ்வித மாற்றங்களும் நாட்டில் நிகழப்போவதில்லை. நாட்டை அழிவு பாதைக்கு ஈட்டுச் செல்பவர்களிடமிருந்து விடுபட்டு நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டுசெல்லும் புதிய தரப்புக்கு வாய்ப்பளிக்க இத்தேர்தலில் மக்கள் முடிவொன்றை எடுக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கிற்கு செல்வதற்கு எமக்கு தரகர்கள் அவசியமில்லை. ராஜபக்ஷக்கள், ஹிஸ்புல்லா, கருணா, பிள்ளையான் மற்றும் ஈழக்கொடியை உயர்த்திய வரதராஜ பெருமாள் ஆகியோரின் தோள்மீதேறியே செல்ல வேண்டியுள்ளது. சஜித்தும் அவ்வாறுதான். எந்தவொரு அடிப்படைவாதச் சக்திகளின் தோளில் ஏறி பயணிக்காத ஒரே சக்தி தேசிய மக்கள் சக்திதான்.

நாங்கள் வடக்கு, கிழக்குக்கு சென்றோம். காத்தான்குடியில் ஒரு வெற்றிகரமான கூட்டத்தை நடத்தினோம். அடிப்படைவாதிகளால் அங்கு அச்சுறுத்தல் இருந்த போதிலும் நாம் மக்களை சந்தித்தோம். அதேபோன்று கல்முனை, அக்கரைப்பற்று, கிண்ணியா, மூதூர், ஓட்டமாவடி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் மக்கள் சந்திப்புகளை எந்தவொரு அடிப்படைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் தோள்மீதேறியும் நடத்தவில்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்