இலங்கை
Typography

19வது திருத்தச் சட்டத்தின் நீட்சியுடன் நாட்டை முன்நர்த்த முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை வணிக சபையின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அநுர குமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ரணில் விக்ரமசிங்கவின் அதிகார நோக்கமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகார நோக்கமும் 19ஆம் திருத்தத்தில் உள்ளடங்கியுள்ளது. 19வது திருத்தத்துடன் நாட்டை முன்நகர்த்த முடியாது. இந்த இரண்டில் ஒன்றை நாம் பின்பற்ற வேண்டும். ஒன்று நாம் முன்னர் இருந்த இடத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் முழுமையாக பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும்.

எமது யோசனைத் திட்டம் பாராளுமன்றத்தை கேந்திரமாகக் கொண்ட ஆட்சி முறைமையாகும். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பெரும்பான்மை உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள முடியும் என நம்புகிறோம். நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கதிரையில் அமர்ந்தால் அவர்கள் அனைவரும் அதனை இரத்து செய்வதற்காக கைகளை உயர்த்துவார்கள்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்