இலங்கை
Typography

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) கைச்சாத்தானது. 

சுதந்திரக் கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள நிலையில், பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில இரு கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்