இலங்கை
Typography

ஒருமித்த நாட்டினுள் பெளத்த சாசன முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன செயற்படவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் (புதிய ஜனநாயக முன்னணி) ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

கல்கிசைப் பிரதேசத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டில் கலந்து கொண்ட அவரிடம், ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “பௌத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து செயற்பாடுகளையும் ஒருமித்த நாட்டினுள் செயற்படுத்த வேண்டும். அதேபோல், புத்த சாசனத்தை பிரகாசமடையச் செய்ய மதக் கடமைகளை தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS