இலங்கை
Typography

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதவளிக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எதிர்வரும் நவம்பர் மாதத்தில் எந்தவொரு குற்றச்சாட்டுகளும் அற்ற நபராக அரசாங்கத்தின் பதவி காலத்தை நிறைவு செய்து வெளியேறுவேன். ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னேடுக்க நான் தீர்மானித்திருந்த போதிலும், அதற்காக பல போராட்டங்களை நடத்த வேண்டியேற்பட்டது. மக்களின் விருப்பத்தையும், ஏழ்மையையும் புரிந்துக்கொள்ளாதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்