இலங்கை
Typography

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரித்துவரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினர், தமது விசாரணைகளின் சாட்சியங்கள் வரிசையில், இறுதி சாட்சியாளரான ஜனாதிபதியிடம் இன்று வாக்குமூலம் பெறுகின்றனர். இதகோடு இவ்விசாரணைகள் நிறைவுபெற்று, முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பாதர்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற இத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு, கடந்த மே மாதம் முதல் தமது விசாரணைகளை முன்னெடுத்து வந்தது. இந்த விசாரணைத் தொடரில், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலம் முக்கியமானது. அவரது வாக்குமூலம் பெறுவது தொடர்பில், அதற்கான அறிவிப்பை விசாரணைக்குழு விடுத்த போதிலும் ஜனாதிபதி தெரிவிக்குழு முன்னிலையில் பிரசன்னமாக மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் காலை 10 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு செல்லவுள்ளனர் எனவும், தெரியவருகிறது. ஜனாதிபதியின் வாக்குமூலம் பெறப்பட் பின்னர் விசாரணைக்குழுவின் அறிக்கை முழுமையானதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபடும் எனவும் அறியவருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்