இலங்கை
Typography

ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று புதன்கிழமை நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

காலை 09.00 மணி முதல் 11.00 வரையான காலப்பகுதியில் வேட்பாளர் மனுத்தாக்கல் இடம்பெறும் எனப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS