இலங்கை
Typography

நாட்டின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வினையும் பெற்றுத்தராத ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

காலியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தினேஷ் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இதுவரையும் ஜனாதிபதித் தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதும், அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி தற்போது பாரிய பிரச்சினையில் உள்ளது. அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியவில்லை. நாட்டு மக்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்று சேர்க்க முடியவில்லை. அவர்கள் நெருக்கடிக்குள் உள்ளனர். நாட்டின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வினையும் பெற்றுத்தர முடியாத தரப்பினர் ஆட்சிக்கு வந்ததால் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு எடுத்து விட்டனர். கடந்த 4 வருடங்களாக நாட்டிற்கு செய்த சேதங்களுக்காக அவர்களை விரட்டியடிக்க பொதுமக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்