இலங்கை
Typography

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தனக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும், அதன் பலன்களை எதிர்வரும் சில நாட்களில் கண்டுகொள்ள முடியும் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

அலரி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 09.30 மணிக்கு ஆரம்பமான பேச்சுவார்த்தை இரவு 11.30 வரை இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறுமென தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாச, தனக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்