இலங்கை
Typography

எதிர்வரும் தேர்தல்களில் பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக வெறுக்கத்தக்க பேச்சுகள் மற்றும் சேறு பூசல்கள் போன்ற தேர்தல் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கும் பேஸ்புக் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. 

தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தேல்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தள இந்திய மற்றும் இலங்கை பிரதானிகள் கலந்து கொண்டார்கள். இது தவிர 25 மாவட்ட தேர்தல் செயலக தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளும் கலந்து கொண்டதாக  பிரதித் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னாயக்க கூறினார்.

உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பிலும் பேஸ்புக் சமூக வலைத்தளங்களினூடாக தேர்தல் சட்டத்தை மீறும் செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பில் பரந்த அளவில் ஆராய்வதற்காக ஊடக நிறுவன பிரதானிகளையும் சந்தித்து கருத்துப் பரிமாறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்