இலங்கை
Typography

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க 2020ஆம் ஆண்டு கட்சி தலைமைத்துவத்தை இளைஞர்கள் கையில் ஒப்படைப்பதாக உறுதியளித்தார். அதற்கமையவே இன்று களத்தில் இறங்கியுள்ளோம்.” என்று அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

2020இல் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஹரீன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சிலர் தற்போது எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூறுகிறார்கள். எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் நாம் அச்சமடையப் போவதில்லை. நாம் பொது மக்களுடன் இருக்கின்றோம். கட்சி தலைமைத்துவம் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் ஆதரவாளர்களுக்கு அடுத்தேயாகும்.

தற்போதும் சில பிரதேசங்களில் எம்மால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களில் சில பற்றாக்குறை காணப்படுகின்றது. அவ்வாறு எந்த குறையும் இல்லாது சஜித் பிரேமதாசவுடன் மாத்திரமே எம்மால் தொடர்ந்து பயணிக்க முடியும். எனவே சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து அவரை நிச்சயமாக நாட்டின் தலைவராக்குவோம் என்று உறுதியளிக்கின்றேன்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS