இலங்கை
Typography

கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி தொடக்கம் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச் சட்டம் நேற்று வியாழக்கிழமையுடன் காலாவதியாகியுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அவசர காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர், பாராளுமன்ற ஒப்புதலுடன், அவசரகாலச்சட்டத்தை, ஜனாதிபதி தொடர்ந்து நீடிப்பு செய்து வந்தார்.

இந்த நிலையில், அவசரகாலச் சட்டத்தை நீடித்து கடந்த ஜூலை 22ஆம் திகதி வெளியான வர்த்தமானி நேற்றுடன் காலாவதியானது. தொடர்ந்து அவசரகாலச் சட்டத்தை நீடிப்புச் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதனால் அவசரகாலச் சட்டம் இனி நீடிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது தொடர்பான உத்தியோப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்