இலங்கை
Typography

“அமெரிக்கக் குடியுரிமையை கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதியே துறந்துவிட்டேன். ஆகவே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எனக்கு எந்தத் தடையும் இல்லை.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அமெரிக்கக் குடியுரிமையை கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதியே நான் துறந்துவிட்டேன். தற்போது இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளேன். எனது குடியுரிமை தொடர்பில் தொடர்ந்து சிலர் கருத்துகளை வெளியிட்டு வருவதுடன், வழக்குகளையும் தாக்கல் செய்கின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவதைத் தடுக்கும் முயற்சியில் பொய்யான குற்றச் சாட்டுக்களும் சுமத்தப்படுகின்றன. ஆனால், தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு எந்த தடையும் இல்லை. தேர்தல் வெற்றிக்காக கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்