இலங்கை
Typography

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவதற்காக உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

“குடும்ப ஆட்சியினை ஏற்படுத்த வேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சி மக்களாணையினை மதிக்கும் வேட்பாளரையே தொடர்ந்து களமிறக்கியுள்ளது. இந்த ஜனநாயக பொது கொள்கையே இனியும் தொடரும். சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்க முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வொன்று பதுளையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே, ஹரீன் பெர்ணான்டோ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டு மக்களுக்கும், கட்சிக்கும் சேவையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவதே எமது பிரதான நோக்கமாக காணப்படுகின்றது. அவரை வெற்றிப்பெறசெய்ய எந்நிலைக்கும் செல்ல தயார். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயக மிக்க அரசாங்கம் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சியினால் உருவாக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்