இலங்கை
Typography

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு செல்வது அவசியம் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். 

தெரிவுக்குழுவுக்கு செல்லவில்லை என்றால், அது பாராளுமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட தயாசிறி ஜயசேகர, நீதிமன்றமும் இந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ளதால் தெரிவுக்குழுவுக்கு செல்வதா இல்லையா என்பதை சபாநாயகர் தெரிவிக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்துப் பேசும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்