இலங்கை
Typography

“அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, எமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி உரிய நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவை அறிவிப்போம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துக்கொண்டிருந்த இரா.சம்பந்தன், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் அரசியல் ரீதியாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்ட பின்னர், நாட்டில் ஏற்பட்ட சில பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக பாதுகாப்பு நிலைமைகள் தற்போது இன்னும் மோசமடைந்திருக்கின்றது.

தமிழ் மக்கள் நீண்ட காலமாக பல்வேறு வன்முறைகளுக்கு, உள்ளாகி வந்திருக்கின்றார்கள். தமிழர்களுடைய உரிமைப்போராட்டம் தொடர்பாக, ஒரு அரசியல் தீர்வு பெறுவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டு, பல முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும்கூட அது இன்னும் ஒரு முடிவிற்கு வரவில்லை.

இவற்றுக்கு முடிவு காண தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டியது அத்தியாவசியம். ஒற்றுமையே தமிழர்களின் பலம். அவர்கள் ஒற்றுமையில்லாமல் இருப்பார்களேயானால் அவர்கள் பலவீனமடைவார்கள்”என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்