இலங்கை
Typography

கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற ‘மட்டக்களப்பு கம்பஸ் (Batticaloa campus)’ எனும் ஷரி-ஆ பல்கலைக்கழகத்துக்கு அனுமதி வழங்காதிருக்கவும், மதரசாக்களை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ஷரி-ஆ பல்கலைக்கழகம் மற்றும் மதரசாக்கள் குறித்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

அதன்போது, “பட்டக்கல்வி நிறுவனமொன்றுக்கான அனுமதியை மாத்திரமே வழங்க முடியும். அதுதவிர, ஷரி-ஆ பல்கலைக்கழகமொன்றை நடத்த, ஒருபோதும் இடமில்லை. இனம், மதத்தை முன்னிலைப்படுத்தாது, கல்வியை மாத்திரம் நோக்காகக் கொண்டு மாணவர்களை உள்வாங்கி நடத்துவதற்கே அனுமதி வழங்கப்படும்.” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மதரசாக்களை, கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில், கல்வி அமைச்சும் முஸ்லிம் விவகார அமைச்சும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்