இலங்கை
Typography

இனம் அல்லது மதத்தின் பெயரில் செயற்படும் அரசியல் கட்சிகளைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கத்தோலிக்கப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என தனித்தனி அமைச்சுக்களை அமைத்துள்ளதை விடுத்து, முன்பிருந்தது போல் அனைத்து சமயங்களுக்கும் ஒரே அமைச்சை அமைக்குமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் இடம்பெற்று வரும் மோதல்களுக்கு அரசியல் கட்சிகளின் பிரதேச மட்டத் தலைவர்கள் தொடர்புபட்டுள்ளதுடன், அவர்களது கையாட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

உயிர்த்த ஞாயிறு பண்டிகை தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 20 நாட்கள் கடந்துள்ள நிலையில், அறிவுபூர்வமான மக்கள் என்ற வகையில் பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர சட்டத்தைக் கையிலெடுத்து செயற்படுவது நல்லதல்ல.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS